தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு.

சென்னையில் மண்ணடி காளிங்கம்பாள் கோயில் முன் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை, இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட 600 பேர் மீது கடற்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்று கோவையில் போராட்டம் நடத்திய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது பந்தயசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமை உட்பட வாரத்தின் 7 நாட்களும் கோயில்களை திறக்க வலியுறுத்தி பாஜக சார்பில் நேற்று மாநிலம் முழுதும் உள்ள முக்கிய கோயில்கள் முன் போராட்டம் நடந்தது.

அதன்படி, சென்னை காளிகாம்பாள் கோயில் அருகே நடந்த போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மக்கள் குரலுக்கு செவி சாய்க்காவிடில் 10 நாட்களுக்கு பின் அரசே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.இந்த நிலையில் பாஜக தலைவர் உட்பட சுமார் 600 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்