70 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் செய்தது என்ன ? ராகுலுக்கு அமித்ஷா கேள்வி..!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மக்களவை தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் பங்கேற்றார். இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
சமீப காலமாக நடைபெற்ற எட்டு இடைத்தேர்தல்களில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், அவர்களுக்கு எதிராக இன்னும் 14 மாநிலங்களில் ஆட்சியில் இருந்து வருகிறோம்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டியது, எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கியது என பல்வேறு மக்கள் நலப்பணிகள் என பட்டியல் நீளுகிறது. ஆனால், ராகுல் இது போதாது, அது போதாது என்கிறார்.
நீங்கள் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்?  மூன்று தலைமுறைகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் எதுவும் செய்யாததால் தான் எங்களால் மக்களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுக்க முடிந்தது, ஏழைத் தாய்மார்களுக்கு சிலிண்டர்களை வழங்க முடிந்தது.
அவர் விடுமுறைக்கு எங்கு செல்கிறார் என்பதும், எங்கிருந்து வருகிறார் என்பதும் யாருக்கும் தெரியாது என குற்றம் சாட்டினார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment