குஜராத்தில் சிறுத்தை தாக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு..தொடர்ந்து நிகழும் சம்பவம்.!

குஜராத் கிராமத்தில் சிறுத்தை 7 சிறுமியை தனது வீட்டிற்கு வெளியே இழுத்துச் சென்று கடித்து கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. 

குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் சங்கசார் கிராமம் அருகே 7 வயது சிறுமி சிறுத்தையால் கொல்லப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரே மாதத்தில் இப்பகுதியில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

இந்நிலையில் சிறுத்தை சிறுமியை தன்பூர் தாலுகாவில் உள்ள தனது வீட்டின் வெளியே திங்கள்கிழமை மாலை இழுத்துச் சென்றதாக வாசியா துங்ரி வனத்துறை அதிகாரி மகேஷ் பர்மர் தெரிவித்தார். சிறுமியின் பாதி சாப்பிட்ட உடல் இன்று காலை காட்டுக்குள் காணப்பட்டது என்றார்.

இதற்கிடையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி, அதே தாலுகாவில் காந்து கிராமத்தில் சிறுத்தை ஒரு குழந்தையை கொன்றது . ஜூலை 26 ம் தேதி கஜூரி கிராமத்திற்கு அருகே ஒரு மேய்ப்பன் என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார் என்றார்.

இந்த பகுதியில் சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்கிய பல சம்பவங்கள் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் பதிவாகியுள்ளது. இந்த சிறுத்தைகளை சிக்க வைக்க வீடுகளுக்கு அருகிலுள்ள இடங்களில் பல கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

அதே பகுதியில் கடந்த திங்கள் அன்று இரவு ஒரு சிறுத்தை சிக்கியது. ஆனால் ஏழு வயது சிறுமியைத் தாக்கிய சிறுத்தை  தானா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.