ஸ்கூபா டைவிங் உடையில் கடலுக்குள் பயணம் செய்து பிளாஸ்டிக்கை நீக்கும் 7 வயது சிறுமி…!

ஸ்கூபா டைவிங் உடையில் கடலுக்குள் பயணம் செய்து பிளாஸ்டிக்கை நீக்கும் 7 வயது சிறுமி. 

சென்னை, காட்டுப்பாக்கத்தில் வசிக்கும், ஸ்கூபா டைவிங் பயிற்சியாளரின், ஏழரை வயது மகள் தான் தாரகை ஆராதனா.  இவர் பிறந்த 3 நாளிலேயே அவரை, தண்ணீர் தொட்டியில் வைத்து பழக்கப்படுத்தியதால், தற்போது கடலுக்குள் குட்டி கடல் கன்னியாக வளம் வருகிறார்.

இந்நிலையில், ஸ்கூபா டைவிங் உடையுடன், செயற்கை சுவாச கருவியுடன் கடலுக்கு 7 மீட்டர் ஆழம் வரை செல்கிறார். இவர் கடலுக்கு மாசை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நீக்குவதுடன், கடலுக்குள் வலைகளில் சிக்கி உயிருக்கும் போராடும் உயிரினங்களையும், தனது தந்தையுடன் சேர்ந்து மீட்டெடுக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் தான், கடல் வளத்தை அசுத்தப்படுத்துவதாகவும், குட்டிபோட்டு பாலூட்டும்  கடல் பசுக்களை பாதுகாக்க தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.