பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை! அறிக்கை வெளியிட்ட இரா.முத்தரசன்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை! அறிக்கை வெளியிட்ட இரா.முத்தரசன்!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இரா.முத்தரசன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட 7 பேரின் விடுதலை குறித்து பல தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், இரா.முத்தரசன் அவர்கள், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து  வருகின்றனர்.

இவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில், நீண்ட காலதாமதம் ஏற்பட்ட நிலையில், இவர்களுக்கு 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை, 2018-ல் 7 போரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், ஆளுநர் இரண்டு ஆண்டு காலமாக முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக மக்கள் வலியுறுத்தியும் ஆளுநர் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில், பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், ஆளுநரின் காலதாமதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, நீதிமன்றத்திற்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. எனினும் அதை பயன்படுத்த விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்ததாகவும், 7 பேர் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால், அது வரலாற்றில் மறுக்கப்பட்ட நீதியாகவே பதிவாகும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு நிர்வாக ஆணையின் மூலம் 7 போரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube