ஒவ்வொருவரும் தங்கள் குளிர்சாதனப் பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 7 பொருட்கள் என்ன தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாத வீடே இல்லை எனலாம்; அந்த அளவிற்கு நவீன உபகரண பொருட்களின் ஆதிக்கம் நமது அன்றாட வாழ்க்கையில் அதிகரித்துவிட்டது. இந்த நவீன உபகரணங்கள் பல நன்மைகளை அளித்தாலும், சில தீமைகளையும் புரிகின்றன; ஆனாலும் தீமைகளைக் காட்டிலும் அதிக நன்மைகளை நாம் பெறுவதால் இப்பொருட்களின் பயன்பாடு நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.

இந்த பதிப்பில் நாம் நவீன உபகரணமான குளிர்சாதனப்பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம்.

முட்டை

தினந்தோறும் ஒரு முட்டை உண்பது நல்லது என்று கூறப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாக முட்டை விளங்குகிறது.

ஏதேனும் நொறுக்குத்தீனி அல்லது சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள என தேவையான சமயத்தில், நினைக்கும் நேரத்தில் உடனடியாக தயாரித்து உண்ண ஏற்ற உணவு முட்டை ஆகும். ஆகையால் எல்லா நாட்களிலும், நேரங்களிலும் உங்கள் வீட்டு குளிர்சாதனப்பெட்டியில் முட்டைகள் இடம் பெறல் அவசியம்.

தயிர்

தயிர் என்பது ஒரு உயிர் காப்பான் போல; சமைக்க பிடிக்காத நேரங்களில் எளிதில் உணவு சமைக்க, செரிமானத்திற்கு உதவ, லஸ்ஸி போன்ற பானங்கள் தயாரிக்க என பலவகையில் பயன்படும் ஒரு உணவுப்பொருள். இது கட்டாயமாக ஒவ்வொருவரின் குளிர்சாதனப்பெட்டியிலும் இடம் பெற வேண்டும்

பாதாம்

பாதாம் பருப்புகள் மூளையின் மீச்சிறந்த செயல்பாட்டிற்கு அதிக நன்மை பயப்பவை ஆகும்; இந்த பாதாம் பருப்புகள் நிச்சயம் உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

பன்னீர்

பன்னீர் என்பது கால்சியம் சத்துக்கள் நிறைந்த ஒரு முக்கிய உணவு ஆகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலில் கால்சியம் சத்துக்களை அதிகரிக்க பெரிதும் உதவும்; இந்த உணவுப்பொருள், கண்டிப்பாக உங்கள் இல்லத்தில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள் பழங்கள் உடலின் இரத்த உற்பத்தி, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களுக்கு அத்தியாவசியம் ஆனவை ஆகும்; ஆகையால் இப்பழங்கள் நிச்சயம் ஸ்ட்டாக்கில் இருக்கும் வண்ணம் வழிவகை செய்யுங்கள்.

பால்

ஒவ்வொருவரும் தினசரி தங்கள் நாளை பால், டீ, காபி போன்ற பானங்களை பருகி தான் தொடங்குவர்; ஒரு நாளில் பல முறைகள் தேநீர் அருந்தும் பழக்கம் பெரும்பாலுமான மக்களுக்கு உண்டு. குழந்தைகள் இருக்கும் வீட்டில் பால் என்பது அவசியத்தேவை.

ஆகையால், பால் எல்லா நேரங்களிலும் வீட்டில் இருக்குமாறு கவனித்துக் கொள்ளுதல் நல்லது

எலுமிச்சை

எலுமிச்சை பழங்கள் உடலை தூய்மைப்படுத்தி செரிமானத்திற்கு உதவி உடல் நலத்தை மேம்படுத்தஉதவும்; எலுமிச்சை பழங்களை வீட்டில் அனைத்து நேரங்களிலும் தயார் நிலையில் வைத்திருப்பது பல வகையிலும் உதவும்.

author avatar
Soundarya

Leave a Comment