ஆறாவது வாரத்திலும் விண்ணைமுட்டும் வெற்றி! 100க்கும் அதிகமான திரையரங்குகளில் தலயின் ‘விஸ்வாசம்’!!

ஆறாவது வாரத்திலும் விண்ணைமுட்டும் வெற்றி! 100க்கும் அதிகமான திரையரங்குகளில் தலயின் ‘விஸ்வாசம்’!!

தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவதாக  வெளியன திரைப்படம் ‘விஸ்வாசம்’ சத்ய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். நயன்தாரா, விவேக் , தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.

இப்படம் தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை குடும்பத்துடன் பார்க்கும்படி ஆக்ஷ்ன் கலந்து எடுக்கப்பட்டிருந்தது. ஆதலால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் வெளியாகி 6 வாரங்களை நெருங்கியும் இடையில் பல திரைப்படங்கள் வெளியானாலும் தமிழ்நாட்டில் இன்னும் நூற்றுக்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது . இதனை திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பல மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் காட்சிநேரம் மாற்றியமைக்கப்பட்டு ரசிகர்கள் ஆதரவோடு திரையிடப்பட்டு வருகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *