
தூத்துக்குடி; நிகிலேசன்நகரைச் சேர்ந்தவர் காந்திமதி இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் துணைப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இரவில் வீட்டுக்குள் ஏ.சி அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, பீரோ உடைக்கப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது .இதையடுத்து சிப்காட் போலீஸார் கொள்ளையடித்தவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தது கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.