கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீனவர்கள், விவசாயிகளுக்கு 62,870 கோடி ரூபாய் நிதி - அரசாங்கம் அதிரடி!

கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீனவர்கள் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பில்

By Rebekal | Published: Jul 02, 2020 03:23 PM

கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீனவர்கள் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு அவர்களுக்கு நிதி வழங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மீனவர்கள், கால்நடை வளர்ப்பு செய்பவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு மூலம் இரண்டு லட்சம் கோடி சலுகை கிடைக்கும் என மே மாதம் இந்தியா அரசாங்கம் கூறியிருந்த நிலையில் தற்பொழுது கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் 60 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் 62,870 கோடியை நிதியாக பிரித்து அளிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த மே மாத அறிவிப்பான ரெண்டு லட்சம் கோடி கடனில் 70.32 லட்சம் கிசான் கடன் அட்டைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் வாங்கி மூலம் கிஷான் க்ரெடிட் கடன் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இது பால் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc