இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 2,542 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,33,105 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 60,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1,753 அதிகமாக உள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,96,33,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 2,542 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,79,573 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,83,88,100ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,65,432 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 26,19,72,014 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.