விவசாயிகளுக்கு 6000 ரூபாய்…இணைய தள சேவையை தொடங்கியது மத்திய அரசு….!!

பிப்ரவரி 1_ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் மத்திய வேளாண்துறை அமைச்சகம் தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றது.இந்நிலையில் இன்று வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , விவசாயிகளுக்கு குறைத்தபட்ச வருமான திட்டத்தின் படி அனைத்து மாநில அரசுகளும்  2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பெயர்களை ஆண்டுக்கு 6000 ரூபாய் பெறும்  குறைந்த பட்ச வருவாய் திட்டத்தில் இணைக்கலாம் என்று தெரிவித்துள்ளது . மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த http://pmkisan.nic.in  என்ற இணைத்தை மத்திய வேளாண்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment