ஆக்சிஜன் பற்றாக்குறையால் 60 உயிர்கள் ஆபத்தில் உள்ளது – டெல்லி கங்கா ராம் மருத்துவமனை!

இன்னும் இரண்டு மணி நேர ஆக்சிஜன் மட்டுமே மீதம் உள்ளதால், 60 உயிர்கள் ஆபத்தில் உள்ளதாக டெல்லி கங்காராம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாளுக்கு நாள் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலை ஒரு புறமிருக்க, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சரியாக கொடுக்க முடியாத நிலை தற்போது பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நோயின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

ஏற்கனவே பல டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே அங்கு ஆக்சிஜன் இருப்பதாகவும் 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆபத்தானது நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனை இயக்குனர் அவர்கள் கூறுகையில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில் 40க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே,  25 பேர் கடந்த 24 மணி நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு இருப்பதால் 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வெண்டிலேட்டர் மற்றும் கபாப் போன்ற கருவிகள் முறையாக செயல்படவில்லை எனவும் விமானத்தின் மூலமாவது உடனடியாக ஆக்சிஜன் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal