டிக் டாக் செயலியில் இருந்து 60 லட்சம் விடியோக்கள் திடீர் நீக்கம்!

டிக் டாக் செயலியானது தேச விரோத செயலுக்காக பயன்படுத்தும் மையமாக செயல்படுகிறது என பிரதமரிடம் ஸ்வதேகி  ஜக்ரான் மஞ்சு என்ற அமைப்பு புகார் செய்திருந்தது. இந்த ஆர்எஸ்எஸ்-இன் ஓர் அமைப்பாகும்.

இது தொடர்பாக இந்திய பயனர்களின் தகவல்களை மூன்றாம் நபருக்கு தெரிவிக்க கூடாது, பொய் செய்திகள் பரப்பக்கூடாது அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன என 24 கேள்விகளை மத்திய அரசு டிக் டாக் நிறுவனத்திடம் கேட்டது.

இதனை தொடர்ந்து தேச விரோத செயல், விதிமீறல் என காரணம் கூறி சுமார் 60 லட்சம் டிக் டாக் விடியோக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய டிக் டாக் நிறுவன இயக்குனர் சச்சின் சர்மா, ‘ பயனர்களின் திறமையை மேம்படுத்துவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம். பயனர்களின் பாதுகாப்பு, நேர்மைக்கு எதிராக செயல்படும் எந்த ஒரு உள்ளடக்கத்தையும் அனுமதிக்க மாட்டோம்.’ என கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.