ஏர்டெல் அதிரடி ;இனி மாதத்திற்கு 60 ஜிபி டேட்டா இலவசம் ..!

ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் சலுகை என்ற பெயரில் மாதம் 10 ஜிபி டேட்டா என மூன்று மாதங்களுக்கு இலவசமாக 30 ஜிபி டேட்டாவினை பாரதி ஏர்டெல் வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட இலவச டேட்டா ஏப்ரல் மாத வாக்கில் நீட்டிக்கப்பட்டது. பின் ஜூன் மாத வாக்கில் மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
மூன்று மாத காலம் நிறைவுற்ற நிலையில், கூடுதல் டேட்டா மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய அறிவிப்பின் படி மை ஏர்டெல் செயலியில் வாடிக்கையாளர்கள் பெறும் டேட்டா மார்ச் 2018 வரை வழங்கப்படுகிறது.

Leave a Comment