சோதனையில் 60 போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு !இரண்டாவது நாளாக தொடரும் சோதனை ….

                          Image result for சசிகலா-தினகரன்
நேற்று நடந்த வருமானவரிதுறையினரின் சோதனை இன்றும் நடைபெற்றுவருகிறது . சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு அலுவலகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    23 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஓரிரு இடங்களில் சோதனை முடிந்துள்ளது. 

இந்த நிலையில், சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், அண்ணன் மனைவி இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், எஸ்டேட்டுகள் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பல கிடைத்து உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டு இருப்பதாகவும், கூடுதல் ஆதாரம் இருப்பதாகக் கருதப்படும் இடங்களிலும், ஆவணங்கள் சிக்காத இடங்களிலும் சோதனை இன்று நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

திவாகரன் வீடு மற்றும் அவரது கல்லூரியிலும் சோதனை நடக்கிறது. அதேபோல், ஜெயா டிவி, ஜெயா டிவி சிஈஓ விவேக் அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா இல்லங்களிலும் விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

கூடலூர் கோடநாடு பங்களாவில் மரவேலை பார்த்து வந்த சஜீவனுக்கு சொந்தமான இடங்களிலும், சென்னை அண்ணா நகரில் இளவரசியின் மகன் விவேக் மாமனார் பாஸ்கர் வீட்டிழும் சோதனை நடைபெற்று வருகிறது. 2வது நாளாக வருமானவரி சோதனை தொடர்வதால் சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் தியேட்டரில் 2 ஆம் நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் சோதனை நடந்த வண்ணம் உள்ளது. 

 இதனையடுத்து தினகரன் மற்றும் சசிகலா நகர முடியாத அளவிற்கு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கியுள்ளனர். மேலும் அவர்கள் மட்டும் பட்சத்தில் அவர்கள் சிறைக்கு செல்வது உறுதியாகியுள்ளது. 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment