ருமேனியாவில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட 6 வார குழந்தை பலி…!

குழந்தையை பாதிரியார் தண்ணீரில் 3 முறை அமிழ்த்தி எடுத்துள்ளார்.  குழந்தைக்கு சற்று நேரத்தில் உடநலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சில மணி நேரங்களில் குழந்தை இறந்துவிட்டது. 

கிறிஸ்தவத்தில், பிறந்த குழந்தைக்கு சில வாரங்களில் ஞானஸ்நானம் கொடுப்பது வழக்கம். இதனையடுத்து ருமேனியாவில், ஒரு ஆலயத்தில் குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அப்போது, குழந்தையை அந்த பாதிரியார் தண்ணீரில் 3 முறை அமிழ்த்தி எடுத்துள்ளார்.

இந்நிலையில், குழந்தைக்கு சற்று நேரத்தில் உடநலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சில மணி நேரங்களில் குழந்தை இறந்துவிட்டது. இதனையடுத்து குழந்தையை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில், நுரையீரலில் 110 மில்லி தண்ணீர் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த பாதிரியார் மீது வாழக்கறிஞர்கள் மனிதக் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.