தூத்துக்குடியில் 6 கல்லூரிகளில் SFI தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

ம.சு பல்கலைகழ க துணைவேந்தரின் அராஜக போக்கையும் ,அநியாய கட்டண கொள்ளையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் ம.சு.பல்கலைகழக ஒருங்கிணைப்புக்குழு தொடர் போராட்டங்களை திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அறிவித்தது.

கடந்த ஆண்டு கட்டணம்
UG 75 , PG 130,M.phil 300
இந்த ஆண்டு உயர்த்தபட்ட கட்டணம்
UG 110 , PG 175, M.phil 500
ஆனால் தமிழக உயர்க்கல்வி துறை பரிந்துறையின் படி கட்டணம்
UG 65, PG 120, M.phil 150

இதன் ஒரு படியாக இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் நேற்று 6 கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் வஉசி கல்லூரியில் கிளை நிர்வாகிகள் மதன்,கிருஷ்ணமுர்த்தி,சதீஷ்,கர்ணன்,ரமேஷ் ,பிரபு,அருள் ஆனந்த் தலைமையில் மாவட்ட இணைசெயலாளர் இ.சுரேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கிளை நிர்வாகிகள் சன்முகப்ரியன்,வெற்றி வேல்,நந்த குமார் மற்றும் அபு தலைமையில் கருப்பு batch அணியும் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் கிளை நிர்வாகிகள் சதீஷ்குமார்,மதன் குமார்,செய்க் அகமது,மரிய சூசைராஜ் தலைமையில் மாவட்ட தலைவர் இரா.அமர்நாத் முன்னிலையிலும் நடைபெற்றது.

தூத்துக்குடி ராஜலெட்சுமி கல்லூரியில் கிளை நிர்வாகிகள் ஹரி,ஆபேல்,சதாம், கோபி தலைமையில் மாநகர தலைவர் ஜாய்சன் முன்னிலையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

சாயர்புரம் ஜி.யு.போப் கல்லூரியில் மாவட்ட குழு உறுப்பினர் ஜாய்சன் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி பிஷப் கால்ட்வெல் கல்லூரியில் மாவட்ட தலைவர் அமர்நாத் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் சுமார் 7000க்கும் அதிகமான மாணவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment