அமராவதி ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பலி..!

death

அமராவதி ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பலி. 

திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த 30 பேர் திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை பகுதியில் நடைபெற்ற கடா வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் அவர்கள் திருப்பூர் செல்லும் வழியில், அங்குள்ள அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

அப்போது ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக ஒருவர் பின் ஒருவராக 8 பேர் சென்று நீரில் மூழ்கிய நிலையில், அருகில் இருந்த மற்றவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சரண் ஜீவா என்ற இரண்டு பேரை உயிருடன் மீட்டனர். பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த அமிர்த கிருஷ்ணன், ஸ்ரீதர், ரஞ்சித், யுவன், மோகன் என்ற நான்கு கல்லூரி மாணவர்கள், ஒரு பள்ளி மாணவர் உட்பட 6 பேரின் உடல்களை மீட்டு தாராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோகன், ரஞ்சித், ஸ்ரீதர், சக்கரவர்த்தி, அமீர், யுவன் ஆகிய 6 பேர் பலி