அருணாச்சல பிரதேசத்தில் நடந்த துப்பாக்கி சூடு.. 6 தீவரவாதிகள் சுட்டு கொலை.!

அருணாச்சல பிரதேசத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 தீவரவாதிகள்

By gowtham | Published: Jul 11, 2020 01:22 PM

அருணாச்சல பிரதேசத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 தீவரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் அவர்களிடமிருந்து ஆறு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆயுதமேந்திய தீவரவாதிகள் இருப்பதைப் பற்றிய உளவுத்துறை அளித்த தகவல்களின்படி, இன்று அதிகாலை அசாம் ரைபிள் படையினர் மற்றும் அருணாச்சல பிரதேச காவல் துறையினரும்  திராப் மாவட்டத்தில் உள்ள கொன்சாவில் தேடுதல் வேட்டையை தொடங்கினார்கள் .

அப்போழுது அதிகாலை 4:30 மணியளவில் அந்த பகுதியில் உள்ள என்.எஸ்.சி.என் அமைப்பின் தீவரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூட்டில்  அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் காயமடைந்தார். அந்த வீரரை இராணுவ மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டது.

மேலும் 6 நீண்ட தூர ஆயுதங்கள் கொண்ட (நான்கு ஏ.கே.-47 மற்றும் 2 சீன எம்.க்யூ) இதுவரை மீட்கப்பட்டுள்ளன ”என்று அம்மாநில டிஜிபி ஆர் பி உபாத்யயா தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc