பாகிஸ்தானில் ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் 6 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ஒரு மருத்துவமனையில்,  ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால், கொரோனா நோயாளிகள் உட்பட 6 பேர் இறந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், பாகிஸ்தானில் தற்போது இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் இது முந்தைய அலையை விட, மிகவும் அதிக வேகமாக பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 இந்நிலையில், பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ஒரு மருத்துவமனையில்,  ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால், 6 நோயாளிகள் இறந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து கைபர் போதனா மருத்துவமனையில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆக்சிஜன் சப்ளை இல்லாததால், ஒரே இரவில் ஆறு நோயாளிகள் இறந்துள்ளனர்.

ஆறு பேரில் ஐந்து பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும், மற்றொருவர் வேறுபாடு வார்டில் உள்ளவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குளிர்காலத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அதிகம் தேவை என்றும்  செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.