ராஜஸ்தானில் பெண் கூட்டு பலாத்காரம்; 6 பேர் கைது

 டில்லியை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.டில்லியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் ராஜஸ்தானின் பிகாநிர் பகுதியில் , கடந்த செப்., 25 அன்று சாலையில் நின்று கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த சிலர் அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றனர். பின்னர், மேலும் சிலரை அழைத்து காரில் பலாத்காரம் செய்துவிட்டு கடத்திய இடத்தில் இறக்கிவிட்டு சென்றனர். இந்த பெண் நேற்று(செப்.,28) போலீசில் தன்னை 23 பேர் பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை, மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, அவர் தன்னை 6 பேர் பலாத்காரம் சேர்ந்ததாக வாக்குமூலம் அளித்தார். மேலும் தன்னை கடத்தி சென்றவர்களில் சிலரின் விவரங்கள் மற்றும் வாகனத்தின் பதிவெண் விவரங்களை அளித்தார். இதன்பேரில், பலாத்காரம் செய்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment