சரளமாக திருக்குறள் ஒப்புவித்த 5-ம் வகுப்பு மாணவி…! அமைச்சர் அன்பில் மகேஷ் என்ன பரிசளித்தார் தெரியுமா…?

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்பு திருக்குறளை ஒப்புவித்து மாணவிக்கு அப்துல்கலாம் எழுதிய புத்தகம் பரிசளிப்பு.

மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், பள்ளிகளில் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார், இந்நிலையில் ஊமச்சிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவரை வரவேற்ற வீரபாண்டி அரசு பள்ளி மாணவி பவித்ரா, அமைச்சர் முன்னிலையில் சரளமாக திருக்குறளை ஒப்புவித்து, சாமர்த்தியமாக சைகைகள் உடன் விளக்கமளித்தார். இதனை கண்டு வியந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மாணவியை பாராட்டினார். மேலும், மாணவியின் திறமையை ஊக்குவிக்கும் வண்ணமாக, மாணவிக்கு ‘இந்தியா 2020 என்ற அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கினார். மாணவியின் இந்த திறமைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.