ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக பிணைக்கைதிகளாக இருந்தவரின் மனைவியை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக புகார் செய்த கணவன்….!

0
150

கனடா நாட்டை சேர்ந்தவர் ஜோஷூவா பாயல் மற்றும் இவரது மனைவி அமெரிக்கா நாட்டை சேர்ந்த கெயிட்லன் கோல்மேன். இவர்கள் இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் வந்து இருந்தபோது தலீபான் ஆதரவு பெற்ற ஹக்கானி தீவிரவாத குழுவின் பயங்கரவாதிகளால் இவர்கள் இருவரும் கடத்தப்பட்டனர். அப்போது கெயிட்லன் கர்ப்பிணி இருந்தார். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பிணைக்கைதிகளாக சிறைவைக்கப்பட்டு இருந்தனர்.இந்நிலையில் அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர்.பின்பு இவர்களை பாகிஸ்தான் ராணுவம் மீட்டுள்ளது. இவர்கள் இப்போது கனடாவுக்குச் பாகிஸ்தான் அரசின் முலம் கனடா சென்று சேர்ந்துள்ளனர்.
டொரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷுவா பாயல், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த போது, தனது மனைவியை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர், எனது ஒரு  குழந்தையை கொன்றுவிட்டனர் என்றும் அவர் தெரிவித்தார். பயங்கரவாதிகளின் தலைவரால், தங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட பாதுகாவலர், என் மனைவியை பாலியல் வன்முறை செய்தார்.எனவே ஆப்கானிஸ்தான் அரசு எனக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here