57 வயதான நபர் கொரோனாவுக்கு இறப்பு.! கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று போலி அறிக்கை வழங்கிய 3 பேர் கைது.!

கொரோனா தொற்றுக்கான பரிசோதனையில் நெகட்டிவ் என்று கூறி போலி அறிக்கை வழங்கிய சில நாட்களில் 57 வயதான நபர் இறந்ததை அடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த 57 வயதான வங்கி மேலாளர் சின்ஹா என்பவர் கொரோனாவுக்கான பரிசோதனை செய்துள்ளார். ஆனால் தனியார் நோயறிதல் பரிசோதனை மையத்தில் உள்ள ஊழியர்கள் கொரோனா இல்லை என்ற போலி அறிக்கையை வழங்கியதுடன், சின்ஹாவுடன் ரூ. 2,000 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து, ஒரு சில நாட்களில் சின்ஹாவின் உடல் மோசமடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

பின்னர், நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.  அதனையடுத்து சின்ஹாவின் மனைவி போலி பரிசோதனை மையத்தின் மீது புகார் அளித்ததை அடுத்து 3 பேரை கொல்கத்தாபோலீசார்  கைது செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட பிஸ்வாஜித் மற்றும் இந்திரஜித் சிக்தர் ஆகியோர் சகோதரர்கள் என்றும், அவர்கள் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களாக பணிபுரிந்தவர்கள் என்றும், மற்றொருவர் அனித் பைரா ஒரு பிசியோதெரபி மையத்தை நடத்தி வருபவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.