கொரோனாவால் உயிரிழந்த 56 வயது தந்தை – பெண் மருத்துவர், செவிலியர்களை தாக்கிய மகன்கள்!

புனேவில் உள்ள இந்தாபூர் துணை மாவட்ட அரசு மருத்துவமனையில் 56 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததால், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அவரது இரு மகன்களும் மருத்துவர் மற்றும் செவிலியரை தாக்கியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், முறையான படுக்கை வசதி ஆக்சிஜன் வசதிகள் இல்லாமல் பல்வேறு மருத்துவமனை நிர்வாகமும் திணறி வருகிறது. இருப்பினும் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் அனைவருமே தங்கள் வாழ்வை அர்ப்பணித்து தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று கூறலாம். ஆனால் புனேவில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தாபூரில் உள்ள துணை மாவட்ட அரசு மருத்துவமனையில் 56 வயதுடைய நபர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இவரது இரண்டு மகன்களும் மருத்துவமனைக்குள் நுழைந்து, அப்போது பணியில் இருந்த பெண் மருத்துவரை கன்னத்தில் அறைந்துள்ளனர், மேலும் அவருடன் இருந்த மருத்துவ உதவியாளர்கள் இருவரையும், இறந்தவரின் இரு மகன்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் நிலையத்திற்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது கொரோனாவால் உயிரிழந்தவரின் மகன்கள் இருவரும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இந்திய தண்டனை சட்டம் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் வன்முறை மற்றும் சொத்து இழப்பு சட்டம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal