மும்பைக்கு வந்த கோவிஷீல்ட் தடுப்பூசி; நாடுமுழுவதும் 13 நகரங்களுக்கு 56 லட்சம் டோஸ்கள் அனுப்பிவைப்பு

நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் ,சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிட் -19 தடுப்பூசியான கோவிஷீல்ட் மும்பைக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளது.மும்பை மாநகராட்சியின் (பி.எம்.சி) சிறப்பு வாகனத்தில் புனேவிலிருந்து சாலை வழியாக இந்த தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 13 நகரங்களுக்கு 56 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 16-ஆம் தேதி இந்த தடுப்பூசியானது முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர்களை தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Castro Murugan