28 C
Chennai
Saturday, October 23, 2021

காட்டில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 55 வயது பெண் …!

உத்தர பிரதேச மாநிலத்தில் 55 வயது பெண் ஒருவர் காட்டில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா எனும் பகுதியில் வைத்து 55 வயதுடைய பெண் ஒருவரை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஜெவார் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 55 வயதுடைய அந்த பெண்ணை காட்டு பகுதிக்குள் நான்கு பேர் சேர்ந்து கடத்தி சென்றதாகவும், அதன் பின்பாக நான்கு பேரும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குற்றவாளிகள் குறித்து தற்பொழுது அடையாளம் கேட்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர், இதற்காக தனி குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பாலியல் வழக்கில் அந்தப் பெண்மணியின் சொந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தான் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More