இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கொண்ட T20I தொடரில் ரூ.5,000 கோடி வருவாய் கிடைக்கும் – PCB!

PCB

இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் கலந்துகொள்ளும் T20I போட்டி இந்த நான்கு அணிகளுக்கும், ஐசிசிக்கும் சுமார் 5 ஆயிரம் கோடி வருவாயை கொண்டு வரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த வாரம் துபாயில் ஐசிசி வாரிய கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, இது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறும் துபாயில் நடைபெற உள்ள ஐசிசி வாரிய கூட்டத்தில் பாகிஸ்தான் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அக்கூட்டத்தில் இந்த திட்டத்தை முறையாக முன் வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் வருவாய் தொடர்பான இந்த பேச்சு ஒரு எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான நிகழ்வாக மாறும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.