500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு.!

By

Kamalhasan MNM Tasmac

500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனும் தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்கோரிக்கையின் போது, 500 சில்லறை விற்பனை மதுக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என அறிவித்ததன் பேரில் தற்போது 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதனை வரவேற்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,  500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது, பாராட்டுகிறது. மதுக்கடைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு நடைமுறைக்கு வருவதை பாராட்டுகிறோம்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க ஒவ்வொரு தாலுகாவிலும் மறுவாழ்வு மையங்கள் அரசு அமைத்திட வேண்டும், மேலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாத எதிர்கால சமுதாயம் உருவாக  தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்துவதாகவும் மேலும் தெரிவித்தார்.