50 கோடி கொரோனா தடுப்பூசிகளை அனுப்ப முடிவு – ஜோ பைடன்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு 50 கோடி பைசர் கொரோனா தடுப்பூசியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஆகஸ்ட் முதல் சுமார் 20 கோடி பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 30 கோடி தடுப்பூசிகளை அடுத்த வருட முதல் பாதிக்குள் வழங்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியா, நேபாளம், வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 70 லட்சம் தடுப்பூசி வழங்குவதாக இதற்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.