31.1 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

நான்கு குழந்தைகள் உட்பட 5 பேர் தீ விபத்தில் உடல்கருகி பரிதாபமாக உயிரிழப்பு.!

குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்  உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்று குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 30 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் மற்றும் அவரது நான்கு குழந்தைகளும் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராம்கோலா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள குடிசைப்பகுதியான அங்கு ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ பல வீடுகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரும் காயமடைந்தார்.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.

ஷேர் முகமது என்பவரது மாற்றுத்திறனாளி மனைவி பாத்திமா மற்றும் அவர்களது நான்கு குழந்தைகளான ரோகி (6), அமினா (4), ஆயிஷா (2), மற்றும் இரண்டு மாத குழந்தை கதீஜா ஆகியோர் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.