சாத்தான்குளம் பெனிக்ஸ் வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது - 14 நாள் சிறையில் அடைப்பு!

சாத்தான்குளம் பெனிக்ஸ் ஜெயராஜ் வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது

By Rebekal | Published: Jul 09, 2020 11:01 AM

சாத்தான்குளம் பெனிக்ஸ் ஜெயராஜ் வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்கு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் காவல்துறையினர் லாக்கப்பில் வைத்து தாக்கியதில் உயிரிழந்த தந்தை மகன் விவகாரம் பெரிய அளவில் உருவெடுத்து தற்பொழுது உச்சநீதிமன்றத்தால் அந்த காவலர்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர் கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது மேலும் புதிதாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் உதவி ஆய்வாளர்பால்துரை மற்றும் காவலர் தாமஸ் ஆகியோருக்கு உடல்நலக் குறைபாடு இருந்ததால் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  செல்லத்துரை, சாமத்துரை, வெயிலு முத்து ஆகியோர் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 14 நாட்கள் காவல் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு  மூன்று காவலர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc