செவிலியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் - முதல்வர் அறிவிப்பு.!

பணியின்போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர்

By balakaliyamoorthy | Published: May 30, 2020 03:31 PM

பணியின்போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை ரஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பணியின்போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செவிலியர் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவருடைய குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுளேன் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 27 ஆம் தேதி ரஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc