கிரிக்கெட் விளையாட்டில் இதுவரை “நோபால்” வீசாத 5 சிறந்த பந்துவீச்சாளர்கள்!

கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம்.

கிரிக்கெட் என்பது, அனைவரும் அறிந்த ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல சாதனைகளை முன்னாள் ஜாம்பவான்களும், தற்பொழுதுள்ள வீரர்கள் படைத்து வருகின்றனர். அந்தவகையில், கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம்.

1. எல் கிப்ஸ் (L Gibbs):

மேற்கு இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான கிப்ஸ், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற பெயரை பெற்றார். 79 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கிப்ஸ், தனது கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை ஒருமுறை கூட நோபால் வீசவில்லை. இவர், 80’s முற்பகுதியிலிருந்து 90’s வரை கிரிக்கெட் விளையாடினார். மேலும், தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 300 விக்கெட்டுகளை எட்டிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்று பெயரையும் கிப்ஸ் பெற்றார்.

2. இயன் போத்தம் (Ian Botham):

கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர், இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர் இயன் போத்தம். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இவரின் அதிரடியான பந்துவீச்சால் ஒரே போட்டியில் 27 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி, 4 முறை அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தி, கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்தார்.

அதுமட்டுமின்றி 1980-ம் ஆண்டில், டெஸ்ட் வரலாற்றில் 100 ரன்கள் எடுத்து ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய “மேட்ச் டபுள்” முடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் இங்கிலாந்து அணிக்காக 102 டெஸ்ட் மற்றும் 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். இவரும் தனது கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை ஒருமுறை கூட நோபால் வீசவில்லை.

3. இம்ரான் கான் (Imran Khan):

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இம்ரான் கான், சர்வதேச அளவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 88 டெஸ்ட், 175 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஒரு முறைகூட நோபால் வீசவில்லை. இவர் தற்பொழுது அந்நாட்டு பிரதமராக இருந்து வருகிறார்.

4. கபில் தேவ் (Kapil Dev):

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக இருந்தவர், இந்தியாவை சேர்ந்த கபில் தேவ். இவர் தனது கிரிக்கெட் வரலாற்றில் அதிகளவிலான விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார். கபில் தேவ், சுனில் கவாஸ்கருடன் இணைந்து 1980-களில் இந்தியா அணியின் வெற்றிக்கு பின்னால் பெரிய பங்காள இருந்தார். கபில் தேவ், தனது கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை ஒருமுறை கூட நோபால் வீசவில்லை.

5. டென்னிஸ் லில்லி (Dennis Lillie):

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான டென்னிஸ் லில்லி, இதுவரை தனது கிரிக்கெட் வரலாற்றில் 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் “never-say-die” என்ற வாக்கியம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.