முகத்தை என்றென்றும் பதினாறாக வைக்க உதவும் 5 எளிய வழிகள்!

ஆணோ பெண்ணோ யாரயினும் தாம் என்றும் இளமைத்துள்ளலுடன் இருக்க வேண்டும் என்றே விரும்புவர். மனிதர்களில் வயதாக வேண்டும் அல்லது முதுமையடைய வேண்டும் என்று விரும்புபவர் எவரும் இருக்க முடியாது. நம் தேகம் மற்றும் மனதை இளமையாக வைத்துக் கொண்டால் அது தன்னிச்சையாக நமது தன்னம்பிக்கையை அதிகரித்து, நம் வாழ்க்கையை அழகாக்கி விடும்.

ஒருவர் மற்றொருவருடன் அறிமுகமாகையில், அறிமுக அட்டை போல் இருக்கும் முதல் விஷயம் முகம் தான். அப்படிப்பட்ட முகத்தை அழகாக மற்றும் இளமையாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிப்பில் முகத்தை என்றென்றும் பதினாறாக வைக்க உதவும் சில எளிய வழிகள் பற்றி பார்க்கலாம்.

உணவு முறை

ருசிக்கு இடம் கொடாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் முக்கியத்துவம் கொடுத்து உண்ணும் உணவை தேர்வு செய்து உண்ணுங்கள். உணவில் ஸ்ட்ராபெர்ரி மற்றும் அவகேடோ போன்ற பழ வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள முயலுங்கள்; இந்த பழங்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி, இ போன்றவை பொலிவான முகத்தை பெற உதவும்.

ஐஸ்கட்டி மசாஜ்

ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. இதனால் முக அழகு மெருகூட்டப்பட்டு இளமைத்தோற்றம் உண்டாகும்.

தலைகீழ் ஆசனம்

தலைகீழாக நின்று ஆசனம் புரிவது போல் சில நிமிடங்கள் இருந்து பின் பழைய நிலைக்கு திரும்பினால் உடலில் உள்ள ரத்தம் முகத்தை நோக்கி பாயத்தொடங்கும்; இதனால் முகத்திற்கு அதிக ஆக்சிஜன் நிறைந்த இரத்தம் கிடைத்து, அதன் தோற்றம் மேம்படும்.

உடற்பயிற்சிகள்

கழுத்து மற்றும் தலைக்கு நல்ல தோற்றம் மற்றும் சக்தியை தரும் சில உடற்பயிற்சிகளை நாள்தோறும் செய்து வருதல் வேண்டும். இவ்வாறு செய்யும் உடற்பயிற்சிகள் நல்ல முக அழகை தருவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

பசுமை தேநீர் – கிரீன் டீ

தினந்தோறும் ஒரு கப் பசுமை தேநீர் அதாவது கிரீன் டீ பருகி வருதல் முகத்திற்கு தேவையான ஆன்டி ஆக்சிடெண்டுகளை தந்து வயதாவதை தடுக்க உதவுகிறது.

author avatar
Soundarya

Leave a Comment