5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது!! அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

  • 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம்  வகுத்தது.
  • 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தலாம் என்றும் மேலும் இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று ஒரு புதிய சட்ட திட்டத்தை கொண்டு வந்தது.

மேலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொது தேர்வு குறித்து மாநில அரசுக்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம்  எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக  கோவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,   5,8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது. பொதுத்தேர்வு உள்ளது என தவறான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றது.அதேபோல் மாநில அரசு விரும்பினால் பொதுத்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

Leave a Comment