ஆந்திராவில் மருத்துவமனைகள் தொடங்கினால் 5 ஏக்கர் நிலம் இலவசம் – ஜெகன் மோகன் ரெட்டி..!!

ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகள் தொடங்குபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசம் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று மாநகராட்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில் அவர் பேசியது ” ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திராவிற்கு என்று சிறந்த மருத்துவமனைகள் எதுவும் இல்லாத காரணத்தினால், இங்குள்ள பொதுமக்கள் சிகிச்சைக்காக தமிழகம் , கர்நாடகா மற்றும் தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகர் மற்றும் 3 மாநகராட்சிகளான திருப்பதி, விஜயவாடா, ராஜமகேந்திரவத்தில் மொத்தம் 16 இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் 30 முதல் 50 ஏக்கர் நிலம் ஒதிக்கீடு செய்யப்படவுள்ளது. 3 ஆண்டுகளுக்குள் 100 கோடி முதலீடு செய்து மருத்துவமனை தொடங்க முன்வந்தால் 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.