மாநிலங்களின் கையிருப்பில் 5.72 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 5.72 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 5.72 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 71,94,73,325 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 5,72,74,025 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 7,00,000 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு 72.37 கோடிக்கும் அதிகமாக  தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திருத்தப்பட்ட கொள்கையை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube