இறங்கி வந்த ஏர்டெல்-ரூ.5/- முதல் ரூ.399/- வரை புதிய ஆபர்கள் அறிவிப்பு!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அதன் ரூ.399/- மதிப்புள்ள புதிய ரீஜார்ஜ் பேக் ஒன்றை ஜியோவிற்கு எதிராக களமிறங்கியுள்ளது.
ஜியோவின் ரூ.399/- ரீசார்ஜ் பேக்கை மட்டுமின்றி இதர ஜியோவின் குறைந்த விலை கட்டண திட்டங்களை எதிர்க்கும் வண்ணம் ஏர்டெல் மேலும் வேறு சில திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ரூ.149/- திட்டமானது ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள், 4ஜி வேகத்திலான 28 நாட்கள் செல்லுபடியாகும் 2ஜிபி தரவு ஆகியவை  வழங்குகிறது.
இதேபோல்  அந்நிறுவனம் ரூ.5 முதல் ரூ.399/- அதன் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.8/- மதிப்புள்ள ரீசார்ஜ் பேக் ஆனது 56 நாட்களுக்கு ஏர்டெல் உள்ளூர் + எஸ்.டி.டி அழைப்புகளை நிமிடத்திற்கு 30 பைசா என்றவொரு விகிதத்தில் மேற்கொள்ள உதவும்.
ரூ.40/- மதிப்புள்ள ஏர்டெல் திட்டமானது, ரூ.35/-க்கான வரம்பற்ற பேச்சு நேரத்தை வழங்கும். மறுபக்கம் ரூ.60/- திட்டமானது ரூ.58/-க்கான வரம்பற்ற பேச்சு நேரத்தை வழங்கும்.
இருப்பதுலேயே மிகவும் மலிவான திட்டமான ரூ.5/- மதிப்புள்ள ரீசார்ஜ் பேக்கின் கீழ் 7 நாட்கள் செல்லுபடியாகும் 4ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு கிடைக்கும். இந்த சலுகையானது 4ஜி சிம் மேம்படுத்துதலுக்குப் பிறகு ஒரே முறை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment