5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்..!

தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, மராட்டியம், கோவா மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மலைசார்ந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சூறைக்காற்று அவ்வபோது வீசும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னக்கல்லார் பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தோவாளை, கூடலூர், பெரியார் அணை ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 7 செ.மீ, கோவையில் 2 செ.மீ., தென்காசி மேட்டுப்பாளையத்தில் 1 செ.மீ, மழையும் பெய்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment