பாலியல் தொல்லை அதிகம் உள்ள நகரங்களில் டெல்லிக்கு 4ஆம் இடம்!! உலக ஆய்வில் அதிர்ச்சித்தகவல்

பாலியல் தொல்லை அதிகம் உள்ள நகரங்களில் டெல்லிக்கு 4ஆம் இடம்!! உலக ஆய்வில் அதிர்ச்சித்தகவல்

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் எந்த நகரங்கள் எல்லாம் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் என்பதை ஆராய்வதற்கான ஆய்வு ஒன்றை தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் நடத்தியது. ஜநா சபையால் குறிப்பிடப்பட்டுள்ள 10 மில்லியன் மக்களுக்கு மேல் உள்ள  முதல் 19 நகரங்களின் பட்டியலை எடுத்துக் கொண்டு அந்த நகரங்களில் எல்லாம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது.ஆய்வுக்கு பின் வெளிட்ட  தகவல்

இந்த நிறுவனம் ஒரு நகரத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள், அவர்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது, அவர்களின் கல்வி நிலை எப்படி இருக்கிறது, அவர்கள் எந்த வகையில் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை எல்லாம் ஆராயும். மேலும் அந்தப் பகுதியில் பெண்கள் இதற்கு முன் எத்தனை முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதையும் இது கருத்தில் கொள்ளும்.

இதனடிப்படையில் இந்த நிறுவனம் பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலை வெளியிட முடிவு செய்தது. ஐநா சபையின் முதல் 19 பெரு நகரங்களின் பட்டியலில் புதுடெல்லியும் இருப்பதால் இந்த நிறுவனம் டெல்லியையும் ஆய்வு செய்தது. டெல்லியில் தங்கி அங்கு நிலவி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், பெண்களின் நிலையையும் இது ஆய்வு செய்தது. தற்போது வெளிவந்துள்ள இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இந்திய தலைநகர் டெல்லி பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கின்றது. முதல் இடத்தில் எகிப்தின் தலைநகர்  கெய்ரோவும், அடுத்து மெக்சிகோ நகர் தகாவும் உள்ளது.  பாகிஸ்தான் தலைநகர் கராச்சி 9வது இடத்தில் உள்ளது.  மூன்றாம் இடத்தில் காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாஷாவும் இருக்கின்றது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளுடன் புதுடெல்லியும் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. டோக்கியோ உலகிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையின் தகவல்களின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பாலியல் புகார்  ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒன்றும் , கற்பழிப்பு  புகார் 4 மனி நேரத்திற்கு ஒன்றும் பதிவாகிறது. இது 2016 ல் மிகக் கடுமையாக உயர்ந்தது.அதே ஆண்டில், 2,155 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும் 2012 ல் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை டெல்லியில் பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *