பலாத்கார முயற்சியில் 4வது மாடியிலிருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டவர் கைது

புதுடெல்லி: ரோகிணி பகுதியில், 20 வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்து 4வது மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிய நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த இளம் பெண்(20) ஒருவர் கடந்த 10ம் தேதி இரவு தனது நண்பர் மற்றும் ஆண் நண்பர், கைது செய்யப்பட்ட 22 வயது வாலிபர் மூவரும் வெளியில் பார்ட்டி ஒன்றுக்காக சென்றனர். விருந்து நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்புகையில், அப்பெண்ணை அவரது வீட்டில் இறக்கி விடுவதாகவும், அதற்காக தனது வீட்டிற்கு சென்று காரை எடுத்து வரலாம் எனவும் கூறி தற்போது இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் பெண்ணை அழைத்து சென்றுள்ளார். இதற்கிடையே, அப்பெண்ணின் நண்பர் மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகியோர் ராம் விகாரிலிருந்து ஆட்டோரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மக்கள் அனைவரும் ஒரே திசையை நோக்கி ஒடுவதை கண்டனர்.

பின்னர், கட்டிடம் ஒன்றிலிருந்து பெண் ஒருவரை கீழே தள்ளிவிட்டு வாலிபர் ஒருவர் தப்பியோடுவதாக அறிந்தனர். அதற்குள்ளாக அங்கு வந்த போலீசார் கட்டிடத்தில் இருந்து கிழே தள்ளிவிடப்பட்டு அரை குறை ஆைடயுடன் உயிருக்கு போராடிய அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அப்பெண்ணுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நினைவு திரும்பியதும் தான் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். பெண்ணை அழைத்து சென்ற வாலிபர் பலவந்தமாக பலாத்காரம் செய்ய முயன்றாரா? அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெண்ணை கீழே தள்ளினாரா என்பது பற்றி தெரியவரும். இருப்பினும், பெண்ணை கீழே தள்ளிவிட்ட 22 வயது வாலிபரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment