துாத்துக்குடி மாநகராட்சி 48வது வார்டு பகுதியில் செயல்படும் கரி அரைக்கும் நிறுவனத்திற்கு எதிர்ப்பு…!

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர குழு  சார்பில்   கூறி உள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது..            
துாத்துக்குடி மாநகராட்சி 48வது வார்டு இந்திரா நகரின் தெற்கு பகுதியில் சிரட்டை கரியை அரைத்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்தக்  கரியை அரைப்பதால் அந்த பகுதி  முழுவதும் தூசியாக பரவி  அவை வீட்டிலும் துாசி படிந்து அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை உருவாக்குகிறது.ஆதலால்  குழந்தைகளும் முதியவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல வித நோய்கள் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள்.ஆகவே அந்த கரி அரைக்கும் நிறுவனத்தை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையில் கூறி உள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்திக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் ராஜா தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) மாவட்ட செயலாளர் முத்து முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர தலைவர் G.முத்துகிருஷ்ணன்,மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பூமயில்,இந்திய மாணவர் சங்கத்தின்மாவட்ட இணைச்செயலாளர் இ.சுரேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 48வது வார்டு செயலாளர் காந்திமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment