47 ஆண்டுகளுக்கு பின்பு மறு உருவம் பெறும் டிஜிட்டல் வசந்தமாளிகை!

750 நாட்களுக்கு மேலாக ஓடி வசூலில் சாதனை படைத்த தமிழ் திரைப்படம் தான் வசந்தமாளிகை. இது 1972 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது, கே.எஸ்.ப்ரகாஷ்ராவ் இயக்கத்தில், சிவாஜி கணேசன் மற்றும் வாணி ஸ்ரீ ஜோடி நடிப்பில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த வசந்தமாளிகை திரைப்படம் 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வருகிற 21 ஆம் தேதி வெள்ளித்திரைக்கு வரவுள்ளது.