260 கிடாய்கள் வெட்டி நாட்டுக்கோழி அறுத்து சிறப்பு பூஜையுடன் விருந்து.! களைகட்டும் திருவிழா.!

  • நாமக்கல் சாணார்பாளையத்தில் அமைந்துள்ள முனியப்பசாமி கோவிலில் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெற்றது. ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசன கண்டு பிரசாதத்தை வாங்கி சென்றனர்.

நாமக்கல் மாவட்டம் அடுத்து சாணார்பாளையத்தில் அமைந்துள்ள திருப்பதி முனியப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு 47 அடி உயரமுள்ள முனியப்ப சாமிக்கு திருவிழா நடைபெறுவதற்கு தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த திருவிழாவிற்கு நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை சுமார் 260 கிடாய்கள் வெட்டப்பட்டு உணவு தயாரிக்கப்பட்டு முனியப்பசாமிக்கு விருந்து படைக்கப்பட்டது.

47 அடி உயரமுள்ள முனியப்பசாமிக்கு 260 கிடாய்கள் வெட்டி நாட்டுக்கோழி அறுத்து சிறப்பு பூஜையுடன் விருந்து.!

அதன் பின்னர் படைக்கப்பட்ட உணவை அங்கு வந்த மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. சாமி தரிசனத்தை கண்ட மக்கள் முன்னியப்பசாமியின் பிரசாதத்தை வாங்கி சென்றனர். இதைத்தொடர்ந்து இன்றும் முனியப்ப சாமிக்கு நாட்டுக்கோழி விருந்தும், சிறப்பு பூஜைகளும் நடக்க உள்ளது. இதனை காண ஏரளமான பக்தர்கள் முனியப்ப சாமி கோவிலுக்கு வந்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்