அமெரிக்காவில் உள்ள காட்டெருமைகளை கொல்ல லாட்டரிகள் விண்ணப்பித்த 45,000 பேர்!

அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேன்யன் பகுதியில் உள்ள காட்டெருமைகள் அமெரிக்காவின் வளங்களை நாசம் செய்வதால் அவற்றின் எண்ணிக்கையை குறைக்குமாறு 45,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஏற்கனவே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் காட்டெருமைகளால் ஒரு புறம் மக்கள் அவதிப்படுகின்றனராம். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உலகப் புகழ்பெற்ற கிராண்ட் கேன்யன் எனும் மாபெரும் பள்ளத்தாக்கு உள்ளது. இந்த பள்ளத்தாக்குகள் அருகே காட்டெருமைகள் அதிகம் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிராண்ட் கேன்யாவில் உள்ள 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த காட்டெருமைகளை கொல்லுமாறு லாட்டரியில் விண்ணப்பித்துள்ளனராம். அதிக மக்கள் தொகை பிரச்சினை ஏற்கனவே இருக்கும் நிலையில், இது குறித்து கலந்தாலோசிக்க 12 திறமையான தன்னார்வலர்களை அங்குள்ள அதிகாரிகள் அழைத்துள்ளனர். பின் இது குறித்து விளக்கம் கேட்ட பொழுது, பூர்வீகமான அமெரிக்காவின் தொல்பொருள் இடங்கள் நாசம் செய்தல், மண் அரிப்பு மற்றும் நீர் மாசுபடுதல் போன்ற பிரச்சனைகளுக்கு காட்டெருமைகள் காரணமாக இருப்பதால் இவற்றின் எண்ணிக்கையை 600 முதல் 200 வரை குறைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம்.

author avatar
Rebekal