ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்தில் : 44பேர் பலி ,58பேர் படுகாயம்

ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்தில் : 44பேர் பலி ,58பேர் படுகாயம்

  • ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த  விபத்தின் போது அந்த நேரத்தில் அப்பகுதியில் 2.2 அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு ஏற்பட்டதாக  சீனாவின் பூகம்பம் கண்காணிப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜியாங்க்சூ  மாகாணத்தில் உள்ள யான்செங் நகரில் உள்ள  ரசாயன தொழிற்சாலையில் நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2.50 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
உரப்பொருள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் அந்த இடத்தில் தீ பிடித்து  எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி  44 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் 32 தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ,58 தொழிலாளர் கள் படுகாயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள்  வெளியானது.
 மேலும் தொழிற்சாலையில் இருந்து 88  பத்திரமாக மீட்கப்பட்டதாக அவசர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த  விபத்தின் போது அந்த நேரத்தில் அப்பகுதியில் 2.2 அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு ஏற்பட்டதாக  சீனாவின் பூகம்பம் கண்காணிப்பு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து  சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகி படங்களில், தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு தீப்பிழம்பு எழுவதையும், அருகில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்த  காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
ரசாயன தொழிற்சாலையில்  ஏற்பட்ட வெடி விபத்தால் வெளியாகி நச்சுக்கசிவால் , அருகில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வேதியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *