ஐஸ்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்க போகும் 42 வயதான பெண் தலைவர்…

ஐஸ்லாந்தில் நட‌ந்த‌ பொதுத் தேர்த‌லின் பின்ன‌ர், அந் நாட்டில் Katrin Jakobsdottir த‌லைமையில் ஒரு இட‌துசாரி அர‌சாங்க‌ம் அமைய‌வுள்ள‌து. அங்கு ந‌டந்த‌ தேர்த‌லில் முந்திய‌ ஆளும் க‌ட்சியான‌ வ‌ல‌துசாரி சுத‌ந்திர‌க் க‌ட்சி முத‌லிட‌த்தில் வ‌ந்தாலும், ஆட்சி அமைக்க‌ போதுமான‌ ஆச‌ன‌ங்க‌ள் கிடைக்க‌வில்லை. ஏனெனில், சுத‌ந்திர‌க் க‌ட்சியும், அத‌ன் த‌லைவ‌ரும் ஊழ‌ல் குற்ற‌ச்சாட்டுக‌ளில் மாட்டிக் கொண்ட‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளுட‌ன் கூட்டுச் சேர‌ பிற‌ க‌ட்சிக‌ள் விரும்ப‌வில்லை.

அத‌னால் தான் முன்கூட்டிய‌ தேர்த‌ல் ந‌டைபெற்ற‌து. இர‌ண்டாவ‌தாக‌ வ‌ந்த‌ இட‌து – சூழ‌லிய‌ல் க‌ட்சியின‌ருக்கு ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிட்டிய‌து. புதிய‌ பிர‌த‌ம‌ராக‌ ப‌த‌வியேற்றுள்ள‌ Katrin Jakobsdottir, சோஷ‌லிச‌க் க‌ட்சி, பைரேட் க‌ட்சி ஆகிய‌ பிற‌ இட‌துசாரிக் க‌ட்சிக‌ளுட‌ன் கூட்ட‌ர‌சாங்க‌ம் அமைப்பார். அத்துட‌ன், புதிய‌ அர‌சில் ம‌க்க‌ளின் வ‌ரிப் ப‌ண‌ம் க‌ல்விக்கும் ம‌ருத்துவ‌த்திற்கும் செல‌விட‌ப் ப‌டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment