14.3 C
London
Friday, September 24, 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேருக்கு தொற்று உறுதி…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 593 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,16,13,993 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 721 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,16,13,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 593ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,23,810 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 37,291  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,81,263 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,08,920 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 46,15,18,479 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 52,99,036 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
spot_imgspot_img

Hot Topics

Read More