36 C
Chennai
Wednesday, July 28, 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,383 பேருக்கு தொற்று உறுதி…!


9
/ 100


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,383 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 507 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,57,720 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 41,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 632 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,12,57,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 507 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,18,987 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,652 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,04,29,339 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,09,394 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 41,78,51,151 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 22,77,679 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

Latest news

Related news